Thai Pongal | தைப்பொங்கல்


Thai Pongal is a festival celebrated on the first day of “Thai”, a month in the Tamil solar calendar. It usually falls on the 14th or 15th day of January.  People make Pongal (a sweet dish made using rice, milk, jaggery, etc.) and dedicate it to Lord Surya, the Sun God. This festival is celebrated by Tamil and Telugu people, especially by those who follow Hinduism.  Sometimes, followers of other religions also celebrate this festival. In India, people of various regions call this festival by various names such as Thai Pongal (Tamil), Makar Sankranti (Karnataka, Kerala & Nepal), Farmer’s festival (Tamil), Sankranti (Andhra & Telangana) and Uttarayana (Gujarat & Rajasthan).

According to astrology too, Thai Pongal Day is a special day, because it marks the start of the six month-long northward journey of the sun (the uttarayanam) and the entry of the sun to the zodiac sign Makara. 

So, why is it called by various names? 

Pongal means, “to boil, overflow”, which refers to the traditional food item made by boiling the newly harvested rice in milk with jaggery. As the day marks the first day of the Thai month, it is called “Thai Pongal”. It is called “Makar Sankranti” because it is on this day that the sun enters the zodiac sign Makara. It is called “the Farmer's festival'' because farmers celebrate this day to say thank you to the Sun God who provides them with suitable weather, rain, heat and light for farming.

How do you celebrate Pongal?

Normally, before the Pongal day, people clean their homes and surroundings, dispose of unnecessary items and paint their houses. They buy new clothes and new pots to make Pongal. On the festival day, they wake up early in the morning, bathe and wear new clothes. Then, they clean and cover the front yard with cow dung and draw colorful rangoli (Kolam) on it. In the center of the front yard, they place a banana leaf, on top of which, raw rice, the  pot, a coconut and mango leaves are placed. On both sides of the pot, they light oil lamps. Using cow dung or turmeric powder, they mould an idol of Lord Ganapathi and keep it near the pot. In addition, they decorate the place where the pongal is made using banana trees, mango leaves and “thoranam” (hanging decorations made up of tender coconut leaf blades).

First, they wash the new Pongal pot and apply holy ash (“viboodhi”) on it. Then, a rope is tied near the neck of the pot and decorated with mango leaves, ginger leaves, turmeric leaves, flowers and a flower garland. The pot is filled with milk and water, and then the lid is placed on top. As the milk boils and overflows from the pot, people shout “Pongalo Pongal” in unison. After that, the head of the family scoops the washed rice with both hands, circles round the pot thrice in a clockwise direction and then adds the rice into the pot. Following this, green gram, jaggery, sugar, ghee, plums and cashew nuts are added. At sunrise, the cooked pongal and various kinds of fruits are placed on a banana leaf and offered to the Sun God and the other gods. At this time, people sing “Panjapuranam” (devotional songs) in prayer. Finally, people share pongal with their family members and neighbors and eat together happily.

Following the Pongal day, Tamil people celebrate Maatu Pongal. Maatu Pongal is celebrated to say thank you to cattle. On that day, people clean the cow shed, give a bath to their cattle and paint their horns. They then decorate their cattle with flower garlands, tinkling bells and multicolored beads. They worship Lord Krishna and Lord Indra for the growth and prosperity of their cattle population. People worship the cows by touching their foreheads and feet, and then perform “aarti” (offer light). Pongal is then made and is first offered to cattle. Later, it is distributed among people as “Cattle prasad”.

The Thai Pongal day is celebrated with enormous enthusiasm by devotees all over the world, and the annual celebration at our university Kurinji Kumaran Temple, the “Kurinji Pongal”, is no exception to this. All nine faculties, the Tamil society and the Hindu society make pongal separately and worship Lord Surya.  Students from every faculty share their pongal with other faculties and eat together. This celebration is also made special by the participation of university students belonging to different faiths. Maatu Pongal too is celebrated every year in our university. This is hosted by the Veterinary faculty with the participation of students and staff .

Pongal is a festival celebrated to express our gratitude to the sun and the cattle, who help farmers make food for every living being in the world.  So let us make use of this day to feel grateful to mother nature and farmers for the vital roles they play in our lives. 

Happy Thai Pongal!





................................................................................

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தை மாதம் முதலாம் திகதி பெரும்பாலும் (ஜனவரி பதினான்கு அல்லது பதினைந்து) தமிழர்களால் கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை தமிழர்கள் மற்றும் தெலுங்கு மக்களால் குறிப்பாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. வேறு மதத்தை பின்பற்றுபவர்களும் இப்பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்தியாவில் இப்பண்டிகையானது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் தைப்பொங்கல், உழவர் திருநாள், தைத்திருநாள் எனவும் கர்நாடகா, கேரளாவில் மகரசங்கிராந்தி எனவும் ஆந்திரா,தெலுங்கானாவில் சங்கிராந்தி எனவும் குஜராத், இராஜஸ்தானில் உத்தராயணா என்றும் அழைக்கப்படுகின்றது.

சோதிடவியல் அடிப்படையில் இப்பண்டிகை முக்கியத்துவம் பெறுகின்றது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும். உத்தராயணத்தின் தொடக்க நாள் தைத்திருநாளாகும். சூரியன் தனு இராசியிலிருந்து மகர இராசிக்கு செல்லும் நாளே தைத்திருநாள் ஆகும், எனவே இத்திருநாள் மகரசங்கிராந்தி என்று அழைக்கப்படுகின்றது. தை மாதம் முதலாம் நாள் பொங்கல் பொங்கி சூரியனை வழிபடுவதால் தைப்பொங்கல் என்றும் உழவர்கள் தமது விவசாயத்துக்கு தேவையான மழை,வெப்பம்,வெயில் என்பவற்றை வழங்கிய சூரியக்கடவுளுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொண்டாடுவதால் உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.

பொங்கல் தினத்திற்கு முதல் நாள்  வீட்டையும் சுற்றுப்புறச்சூழலையும் சுத்தம் செய்வார்கள். சிலர் வீட்டுக்கு வெள்ளை அல்வது வர்ணம் பூசுவார்கள். தைப்பொங்கல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்து முற்றத்தை சாணியால் மெழுகி கோலமிடுவார்கள். முற்றத்தின் மத்தியில் தலைவாழையிலையிட்டு அதன் மீது அரிசியிட்டு அரிசியின் மீது கும்பம் வைப்பார்கள். கும்பத்தின் அருகில் விளக்கு ஏற்றுவார்கள். மஞ்சள் அல்லது சாணத்தை பயன்படுத்தி பிள்ளையார் பிடித்து, அருகம்புல்லை குத்தி பிள்ளையாராக வைப்பார்கள். பொங்கல் பொங்கும் இடத்தை வாழைமரம், கரும்பு மற்றும் தோரணம் கொண்டு அலங்கரிப்பார்கள். புதுப்பொங்கல் பானையை கழுவி அதில் விபூதி,சந்தனம், குங்குமம் பூசுவார்கள். பொங்கல் பானையின் கழுத்தில் நூல் கட்டி அதில் மஞ்சள் இலை, மாவிலை, இஞ்சியிலை மற்றும் பூமாலை என்பவற்றினால் அலங்கரிப்பார்கள். பொங்கல் பானையை பால் மற்றும் தண்ணீரால் நிரப்புவார்கள். அதன் பின் பொங்கல் பானையை அடுப்பில் வைப்பார்கள். பால் பொங்கி வெளித்தள்ளிய பின்பு கழுவிய அரிசியை இரண்டு கைகளால் எடுத்து பானையை மூன்று முறை வலம் இடமாக சுற்றி பானையில் இடுவார்கள். அதன் பின் பயறு , சர்க்கரை , சீனி, நெய் , முந்திரிப்பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சைப்பழம் என்பவற்றையும் சேர்ப்பார்கள்.

சூரிய உதயத்தின் போது பொங்கலை வாழையிலையிட்டு அத்துடன் அர்ச்சனைத்தட்டு(தேங்காய்,வாழைப்பழம்,மாம்பழம்,விளாம்பழம்,தோடம்பழம்,தேசிக்காய்,வெற்றிலை மற்றும் பாக்கு வைத்து தயார் செய்யப்படும்.) இளநீர் என்பன வைத்து சூரியன் மற்றும் இதர கடவுளுக்கு படைப்பார்கள். இறைவனுக்கு படைக்கும் போது தூப தீபம் காட்டி பஞ்சபுராணம் ஓதி வழிபாடு மேற்கொள்வார்கள். அதன் பின் பொங்கிய பொங்கலை குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.

அடுத்த நாளானது மாட்டுப்பொங்கலாக கொண்டாடப்படுகின்றது. மாட்டுப்பொங்கலானது ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் நாள் (ஜனவரி 15 அல்லது ஜனவரி 16) கொண்டாடப்படும். மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதன் நோக்கம் விவசாயத்துக்கு அல்லது உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்துவதாகும். மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாட்டுக் கொட்டில் சுத்தம் செய்யப்பட்டு, மாடுகளை குளிப்பாட்டி அதனை அலங்கரித்து , கொம்புக்கு நிறம் தீட்டி , பட்டுத்துணி கட்டி, விபூதி ,சந்தனம்,குங்குமம் பூசி அலங்காரம் செய்யப்படும். மாடு இருக்கும் இடத்திற்கு அருகில் பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கி அப்பொங்கலை வாழையிலையிலிட்டு விஷ்ணு, இந்திரன் மற்றும் இதர தெய்வங்களுக்கு படைத்து வழிபாடு மேற்கொள்வார்கள். மாடுகள் வளம்பெறவும் செழிப்படையவும் இறைவனிடம் பிரார்த்திப்பார்கள். மாடுகளை வழிபட்டு தூப தீப ஆரத்தி எடுப்பார்கள். இறைவனுக்கு படைத்த பொங்கலை முதலில் மாடுகளுக்கு வழங்கி பின்னர் பிரசாதமாக வீட்டிலுள்ளவர்கள் மற்றும் அயலவர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள். 

குறிப்பாக பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக “குறிஞ்கிப்பொங்கல்” என்ற பெயரில் பேராதனை குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒன்பது பீட மாணவர்களும் தமிழ்ச்சங்கமும் மற்றும் இந்துமாணவர் மன்றமும் தனித்தனியாக தங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை வாழை,மாவிலை மற்றும் தோரணம் கொண்டு அலங்கரித்து, சாணியால் மெழுகி கோலமிட்டு பொங்கல் பொங்கி சூரியக்கடவுளை வழிபடுவார்கள். அனைத்து மாணவர்களும் தத்தமது பொங்கலை மற்றைய பீட மாணவர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்வார்கள். இவ்விழாவுக்கு மற்றைய மதங்களை தழுவும் மாணவர்களும் வருகைத்தருவது சிறப்பம்சமாகும். 

இதேபோல் மாட்டுப்பொங்கலானது பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு விஞ்ஞான பீட மாணவர்களால் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்போது பீடத்திலுள்ள அனைத்து வருட மாணவர்கள்,கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பங்குபற்றுவார்கள். இவ்விழாவின் போது மாடுகள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கி மாடுகளுக்கு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வருகை தந்த விருந்தினர்களுக்கு விருந்துபசாரம் நடைபெறும்.  

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் அன்பு, கருணை, சகோதரத்துவம்,நன்றியுணர்வு,மன்னித்தல்,கடவுள் வழிபாடு என்பன வளர்க்கப்படுகின்றன. புத்தாடை அணிதல் , வாழ்த்துக்கூறுதல் , பகிர்ந்துண்ணல்,தான தருமம் செய்தல் முதலானவற்றால் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகின்றன. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதற்கிணங்க வாழ்வில் நம்பிக்கையை வலுப்படுத்திஇ மரபுகளுக்கமைய பொங்கலைக் கொண்டாடுவோம்.

இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்......


Article by R.Thivaharan 

Cover design by Ganidu Sooriyaarachchi

Edited by Suwathijah Thyagarajah


Comments